Mannar Protest Turbine Tower Project Police 6667
மன்னார் பசார் பகுதியில் நேற்றிரவு பதற்றநிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னாரில் 2ஆம் கட்ட காற்றாலை மின்கோபுர திட்டத்திற்கான பொருட்கள் ஏற்றி வருகின்ற நிலையில் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்று (12) 10வது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் மின்கோபுர திட்டத்திற்கான பொருட்கள் ஏற்றப்பட்டு வருவதோடு மன்னார் நுழைவாயில், மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மன்னார் மாவட்டத்தில் ஒன்றுகூடிய மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள், பொது அமைப்புக்கள், பிரஜைகள் குழுக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் உட்பட 100ற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு மின்கோபுர திட்டத்திற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு செல்லக்கூடாது என்று தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.
அங்கு 100ற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துக்கொண்டதோடு சக பொலிஸாரை வைத்து அனைவரையும் புகைப்படம் எடுத்துள்ளார்.
மக்களின் எதிர்ப்பினை மீறி பொலிஸாரின் உதவியுடன் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் மக்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Mannar Protest Turbine Tower Project Police 6667
மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
