Friday, August 29, 2025
HomeTop Storyஆறே வயதான மாணவர் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் உலக சாதனை!

ஆறே வயதான மாணவர் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் உலக சாதனை!

Six year old student world record 50 meter swim 6604

கொழும்பு 13 சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த (6 வயது) மாணவர் *தினேஷ் ஹெதாவ்*, 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற இந்த சாதனையானது, வெறும் 49 வினாடிகளில் 50 மீட்டர் தூரத்தைக் கடந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட முன்னைய சாதனையான 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து நிகழ்த்தப்பட்டது.

மேலும், இந்த சாதனையானது “சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)” மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென் பெனடிக்ட் கல்லூரியில் சாதனை மாணவனைப் பாராட்டி ஒரு சிறப்புப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சோழன் சாதனைப் புத்தகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, மாணவனின் இந்த வெற்றிக்கு அவரது பெற்றோர்களான குணரத்னம் தினேஷ் மற்றும் சுதர்ஷனி மகேந்திரன் ஆகியோரும், பயிற்சியாளர்கள் மற்றும் கல்லூரியின் நீச்சல் குழு ஆகியோர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மாணவன் ஹெதாவின் இந்த சாதனையானது “இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் சாதனையாக அமைந்துள்ளது” என கல்லூரி நிர்வாகத்தினரால் கருத்து தெரிவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Six year old student world record 50 meter swim 6604

மேலும் வாசிக்க :

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!

சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசார​ணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular