Person kidnapped knifepoint Thalaimannar 6534
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை கத்தி முனையில் கடத்தப்பட்டமை மன்னார் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த கடத்தல் சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையானார்.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மாலை மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.
இதன் போது மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி,காட்டாஸ்பத்திரி பகுதியில் குறித்த பேருந்தை வழிமறித்த ஒரு குழுவினர்,
பேருந்தில் ஏறி ஆயுதங்களினால் பயணிகளை அச்சுறுத்தி, குறித்த நபரை தாக்கி பேருந்தில் இருந்து இறக்கி மோட்டார் சைக்கிளில் கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த நபரை நடுக்குடா காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கிய பின் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
காட்டாஸ்பத்திரி கிராமத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்ற குழுவினரே குறித்த நபரை கடத்தியதாகவும் கடத்தியதற்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Person kidnapped knifepoint Thalaimannar 6534

மேலும் வாசிக்க :
GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் பொலிஸார்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
