Thursday, July 31, 2025
HomeLocal Newsசாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

students achieved excellent results in Ordinary Level 6468

அண்மையில் வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 2024(2025) தோற்றி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் நடைபெற்றது.

1995 O/L, 1998 A/L கல்வியாண்டு பழைய மாணவர்களின் அனுசரணையில் நடத்தப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வுக்கு கல்லூரியின் அதிபர் ரி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 137 மாணவர்களில், 9 மாணவர்கள் 9ஏ, 9 மாணவர்கள் 8ஏ, 6 மாணவர்கள் 7Aஏ, 6 மாணவர்கள் 6ஏ பெறுபேறுகள் உள்ளடங்கலாக 102 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர்.

இம்மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கல்லூரி ஒன்றுகூடல் நிகழ்வின் போது இடம்பெற்றது.

கல்லூரி இன்னிய வாத்தியக்குழுவின் இசை வாத்தியங்கள் முழங்க அதிதிகள், சகிதம் வரவேற்கப்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளின் கரங்களினால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், வெற்றிப்பதக்கங்களும் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் சவுதாகினி சரவணபவன், வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலய அதிபர் ஸோபா ஜெயரஞ்சித், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் ரி.உதயராஜா ஆகியோருடன் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், 95 O/L, 98 A/L கல்வியாண்டு பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

students achieved excellent results in Ordinary Level 6468

மேலும் வாசிக்க :

https://youtube.com/watch?v=MUM7wk7QOTA%3Ffeature%3Doembed
https://youtube.com/watch?v=AHN_ppwYFrM%3Ffeature%3Doembed

விடுதலை விருட்சத்திற்கு நீர் சேகரிக்கும் பணி 8 மாவட்டங்களில் ஆரம்பம்!

குருநாகலில் வயலில் கண்டெடுக்கப்பட்ட சிசுவுக்கு ஜெர்மனியில் வாழ்வு : தாதியர்களுக்கு பாராட்டு (Video)!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular