Government decision regarding Thriposha Institute 4892
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
திரிபோஷ நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த திரிபோஷ நிறுவனத்தை அபிவிருத்தி செய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கங்கள் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே அதன் பலன்களை மக்களால் பெறமுடியாமல் போனதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிலையை மாற்றி மீண்டும் இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவைகளை வழங்கும் செயலூக்கமான நிறுவனமாக திரிபோஷாவை மாற்ற தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
திரிபோஷ நிறுவனத்தை கலைப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்காக இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு, முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அரசுக்குச் சொந்தமான மேம்பட்ட நிறுவனமாக தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Government decision regarding Thriposha Institute 4892


இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!
அரசு ஊழியர்களின் சம்பளம் இல்லாத விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

திரிபோஷ நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
