Friday, February 7, 2025
HomeForeign Newsதென் சூடானில் 20 பேர் உயிரிழப்பு - தென்கொரியாவில் விமானம் தீக்கிரை!

தென் சூடானில் 20 பேர் உயிரிழப்பு – தென்கொரியாவில் விமானம் தீக்கிரை!

20 Killed In South Sudan Plane Crash 5647

தென் சூடானில் 21 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம், தென் சூடானின் எண்ணெய் கிணறு பகுதியில் இருந்து புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தென் சூடானில் இதற்கு முன்னர் பல விமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டில், ஜூபாவில் (Juba) இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 37 பேர் வரை உயிரிழந்தனர்.

சிறு வயதில் கர்ப்பம் தரித்தல் அதிகரிப்பு!

சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு!

அர்ச்சுனா எம்.பி கைது!

இலங்கையில் அறிமுகமாகும் புதிய மென்பொருள் – கைத்தொலைபேசி பாவனையாளர்கள் கவனம்!

அதேவேளை, 2018ஆம் ஆண்டில், ஜூபாவிலிருந்து யிரோலுக்குச் (Yirol) சென்ற சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான F-35 அலாஸ்காவில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தின் பைலட் பாராசூட் உதவியுடன் தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்டார்.

அலாஸ்காவில் உள்ள ஏல்சன் விமானப்படை தளத்தில் பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 12:49 நடந்தது.

விபத்துக்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படையின் 354-வது ஃபைட்டர் விங்கின் கமாண்டர் கர்னல் பால் டவுன்சென்ட், விமானம் பறக்கும் போது விமானத்தில் ஒரு சிக்கலை எதிர்கொண்டதாகவும், இதன் காரணமாக, விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது என்றும் கூறியுள்ளார்.

இந்தநிலையில், தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்ததுள்ளது.

எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் தென் 169 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் 176 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

20 Killed In South Sudan Plane Crash 5647

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

சிறு வயதில் கர்ப்பம் தரித்தல் அதிகரிப்பு

சிறு வயதில் கர்ப்பம் தரித்தல் அதிகரிப்பு

பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவி இரத்து!

பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவி இரத்து!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular