Friday, August 29, 2025
HomeLocal News65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!

65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!

110 buses owned by government officer 6557

கேகாலை பேருந்து டிப்போவின் அத்தியட்சகராக கடமையாற்றி வந்தவரின் பெரும் மோசடி அம்பலமாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கோகாலை பேருந்து டிப்போவின் அத்தியட்சகராக கடமையாற்றி மாதம் அறுபந்தைந்தாயிரம் (65,000) சம்பளம் வாங்கும் ஒருவருக்கு 110 பேருந்துகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கேகாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறே கேகாலை பேருந்து டிப்போ அழிக்கப்பட்டுள்ளது. 65,000 சம்பளம் 110 பேருந்துகளுக்கு சொந்தக்காரர் என்றால் மாதம் ஐந்து இலட்சம் சம்பளம் வாங்க வேண்டும்.

கேகாலை பேருந்து சாலையில் அளவுக்கதிகமாக ஊழியர்கள் இருக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபை திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மீளெழுப்ப ஐந்து வருடங்கள் தேவை.

அரசாங்கம் 600 பேருந்துகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் அவை கொண்டு வருவதற்கு 2026 ஜுன் மாதம் தான் சாத்தியப்படும்.

இலங்கை போக்குவரத்து சபை புற்றுநோய் போல் ஊழல் நிறைந்ததோடு அங்கு அவ்வாறான ஒரு கலாசாரமும் உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் இதை மீட்பதற்கு பெரும் போராட்டம் நடத்துகின்றோம். ஒரு வருடத்தில் புதிதாக உருவாக்கப் போகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

110 buses owned by government officer 6557

மேலும் வாசிக்க :

https://youtube.com/watch?v=MUM7wk7QOTA%3Ffeature%3Doembed
https://youtube.com/watch?v=AHN_ppwYFrM%3Ffeature%3Doembed

GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் பொலிஸார்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular