Saturday, February 8, 2025
HomeHeadlinesயாழில் ஜே.வி.பி க்குள் ஊடுருவிய சுமந்திரன் அணி

யாழில் ஜே.வி.பி க்குள் ஊடுருவிய சுமந்திரன் அணி

யாழ் கொக்குவில் நாமகள் வித்தியாலய பாடசாலை அதிபரும் ஈ.சிற்றி என்ற தனியார் ஆங்கில நிறுவனத்தின் முதலாளியுமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சுமந்திரனின் மிக நெருங்கிய ஆதரவாளர் ஆவார் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன.

இவரும் இவரது தந்தையும் சேர்ந்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுராவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.

சுமந்திரனால் திட்டமிட்டு இவர் ஜனாதிபதித் தேர்தலில் அநுராவுக்கு ஆதரவாக களமிறக்கபட்டதாகத் தெரியவருகின்றது.

தற்போது ஜே.வி.பி கட்சியின் யாழ்ப்பாண முதன்மை வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழில் ஜே.வி.பி கட்சியின் அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரன் அரசியல் சூழ்ச்சிகள் அறியாத அப்பாவி என பலரும் தெரிவித்து வரும் நிலையில் சூதானமாக சந்திரசேகரன் நடக்காவிட்டால் கடைசியில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கும் ஏற்படும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular