Sunday, February 16, 2025
HomeWomen's Specialசெம்ம ஸ்டைலான லுக்கில் மடோனா செபாஸ்டியன் - வசீகரிக்கும் க்ளிக்ஸ்

செம்ம ஸ்டைலான லுக்கில் மடோனா செபாஸ்டியன் – வசீகரிக்கும் க்ளிக்ஸ்

நடிகை மடோனா செபாஸ்டியனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதுவும் அவரது ஸ்டைலிஷான தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2015-ல் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் மடோனா. அல்ஃபோன் புத்திரன் இயக்கிய இந்தப் படத்தின் 3-வது நாயகியாக கவனம் பெற்றார்.

அடுத்த படமே தமிழுக்கு வந்தார். விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படம் இன்றும் பலருக்கும் ஃபேவரைட். நலன் குமாரசாமி இயக்கத்தில் காதலை அழகியலுடன் பேசியிருக்கும் அப்படத்தில் மடோனாவின் க்ளைமாக்ஸ் நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘கவண்’ படத்தில் நடித்தார். ‘பவர் பாண்டி’, ‘ஜூங்கா’ ஆகிய தமிழ் படங்களைத் தொடர்ந்து ‘வைரஸ்’ மலையாளப் படத்திலும் கவனம் பெற்றார்.

அண்மையில் வெளியான விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் சர்பைரஸ் கொடுத்து அசத்தினார் மடோனா.

அடுத்து தமிழில் வெளியாக உள்ள ‘அதிர்ஷ்டசாலி’, ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மடோனாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. அத்துடன் செம ஸ்டைலிஷான அவரது லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular