Monday, February 10, 2025
HomeForeign Newsகனடாவில் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்

கனடாவில் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்

கனடா ஈழத்தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஸ்காபரோ Ellesmere and Orton Park பகுதியில் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 54 வயதுடைய துஷி லக்ஷ்மணன் என்ற பெண் கொல்லப்பட்டுள்ளார்.

தமிழ் பெண் படுகொலை

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயதான ராகுலன் லக்ஷ்மணன்  என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்கான காரணம் வெளியாகவில்லை. கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular